முகப்பு
நாமக்கல்

மீண்டும் பணி வழங்கக் கோரி புதுவாழ்வு திட்டப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

மீண்டும் பணி வழங்கக் கோரி, புதுவாழ்வு திட்டப் பணியாளர்கள் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 5 ஏப்ரல் 2018, 7:12 am IST
பகிர்:

மீண்டும் பணி வழங்கக் கோரி, புதுவாழ்வு திட்டப் பணியாளர்கள் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட புதுவாழ்வு திட்ட அனைத்து பணியாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்க செயற்குழு உறுப்பினர் ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பேபிபிரிசில்லா,  செயலர் கருணாகரன், மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் நிர்மலா வரவேற்றார். 
உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அனைவருக்கும் வேலை வழங்கவேண்டும். 12 ஆண்டு அனுபவத்தை கணக்கில் வைத்து டிஎன்ஆர்டிபி திட்டத்தில் எந்த நிபந்தனையும் இன்றி அனைத்து பணியாளர்களுக்கும் பணி வழங்க வேண்டும். 2017-ஆம் ஆண்டு ஜூன் முதல் வேலையில்லாமல் இருக்கும் பணியாளர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள ஈட்டிய விடுப்பு தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. நாமக்கல் மாவட்ட அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் ராஜேந்திரபிரசாத், பொருளாளர் குப்புசாமி ஆகியோர் பங்கேற்று பேசினர். செயற்குழு உறுப்பினர் சுதாமணி நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments