முகப்பு
நாமக்கல்

முத்திரைக் கொல்லர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர் துறை அலுவலகங்களில் காலியாக உள்ள முத்திரைக் கொல்லர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 5 ஏப்ரல் 2018, 7:12 am IST
பகிர்:

தொழிலாளர் துறை அலுவலகங்களில் காலியாக உள்ள முத்திரைக் கொல்லர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) மஞ்சள்நாதன் வெளியிட்ட செய்தி: கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் வரம்பில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகங்களில் காலியாக உள்ள முத்திரைக் கொல்லர் (எடைகள் மற்றும் அளவைகள் முத்திரையிடும் பணியில் உள்ள அலுவலருக்கு உதவியாளர்) பணியிடங்களுக்கு பணிநியமனம் செய்யப்படவுள்ளது.  தமிழ்நாடு பொது சார்நிலைப் பணியின் கீழான இப்பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான மாத ஊதியம் ரூ.15,900-50-50,400 மற்றும் அரசு நிர்ணயம் செய்யும் படிகள். 1.7.2017 அன்று 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். இன சுழற்சி வகையில் அதிகபட்ச வயது 30-க்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சீர்மரபினர் 32 வயதுக்குள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் ஆதரவற்ற விதவை (அனைத்து வகுப்பினர்) 35 வயதுக்குள் இருக்க வேண்டும். 
மொத்த காலி பணியிடங்கள் 12  (பொது 4, எஸ்சி 2, எஸ்சிஏ 1, எம்பிசி 2, பிசி 3). குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு வகுப்பு வரை பள்ளியில் படித்து பள்ளி இறுதித் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெறாமல் பள்ளிப் படிப்பினை நிறைவு செய்திருக்க வேண்டும். 
விண்ணப்பங்களை கோவை, கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திலும், கோவை, ஈரோடு, குன்னூர், நாமக்கல், சேலம் மற்றும் கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்)அலுவலகங்களிலும் கட்டணம் ஏதுமின்றி பெற்றுக்கொள்ளலாம்.
வரையறுக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சல் மூலம், கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலகத்துக்கு மே 3-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments