ராசிபுரத்தில் தூய்மை பேரணி
ராசிபுரம் ரோட்டரி சங்கம், அரசு தலைமை மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில் தூய்மையே சேவை இயக்கம்-2018 திட்டத்தின் கீழ் தூய்மை பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் ரோட்டரி சங்கம், அரசு தலைமை மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில் தூய்மையே சேவை இயக்கம்-2018 திட்டத்தின் கீழ் தூய்மை பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, ராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனை முன் தொடங்கிய பேரணியை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ஏ.ராஜ்மோகன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
டாக்டர் ஹானிமன் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய மாணவர்கள் பங்கேற்ற இந்த பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் மருத்துவமனையை சென்றடைந்தது. பேரணியில் தூய்மை, சுகாதாரத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகைகள் அடங்கிய தட்டிகள் ஏந்தியவாறு மாணவ, மாணவியர் சென்றனர்.
இதில், ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் கே.குணசேகர் தலைமை வகித்தார். ரோட்டரி சங்கச் செயலர் டி.வினோத், தலைவர் (தேர்வு) எல்.சிவக்குமார், ஒருங்கிணைப்பாளர் ஏ.ராஜு உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.