வீடு புகுந்து நகை, வாகனங்களை திருடிய 2 பேர் கைது
நாமக்கல் மாவட்டத்தில் வீடு புகுந்து நகை, வாகனங்களைத் திருடிய 2 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் வீடு புகுந்து நகை, வாகனங்களைத் திருடிய 2 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
கடந்த 12-ஆம் தேதி மோகனூர் அருகே லத்துவாடியில் வீட்டின் பின்பக்க பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி நாமக்கல், நந்தவனத் தெருவில், இறைச்சி கடைக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்டது.
அக்டோபர் 20-ஆம் தேதி, கடந்த 2-ஆம் தேதி, 15-ஆம் தேதிகளில் இருசக்கர வாகனம்ஸ நகைகள் பல்வேறு இடங்களில் திருடப்பட்டது. இதில் தொடர்புடையவர்களைப் பிடிக்க குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை பரமத்தி சாலை, போதுப்பட்டி பிரிவு சாலை அருகே போலீஸார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது ராமநாதபுரம் மாவட்டம் திலீப்குமார் (23), திண்டுக்கல் மாவட்டம் பாலமுருகன்(37) ஆகியோர் போலீஸாரைக் கண்டதும் தப்ப முயன்றனர். அவர்களைப் பிடித்து விசாரித்ததில் இருவரும் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸார் ரூ.3.35 லட்சம் மதிப்புள்ள 33.50 பவுன் தங்க நகைள், ரூ.1.10 லட்சம் மதிப்புள்ள 3 இருசக்கர வாகனங்ளும் கைப்பற்றப்பட்டன.
இந்த வழக்குகளில் குற்றவாளிகளைப் பிடித்த காவல் உதவி ஆய்வாளர் சந்திரன் தலைமையிலான தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.