நாமக்கல்

குப்பை கொட்ட வந்த லாரி சிறைபிடிப்பு

DIN

எட்டிமடை புதூர் கொத்தமல்லிக்காடு பகுதியில் தனியார் இடத்தில் குப்பைகளைக் கொட்டி வரும் லாரியை பொதுமக்கள் வியாழக்கிழமை சிறைபிடித்தனர்.
கொத்தமல்லிக்காடு  விஐபி கார்டன் பகுதியில் திருச்செங்கோட்டை சேர்ந்த தனியார் சைசிங் உரிமையாளர் ஒருவர்  நிலத்தை வாடகைக்கு எடுத்தார். அவருக்குச் சொந்தமான இடத்தில் கடந்த சில ஆண்டுகளாக லாரிகள் மூலம்  குப்பைகளை  கொட்டுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இக்குப்பைகளால்  தங்கள் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், நிலத்தடி நீர்  கெடுவதாகவும்,கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாவதாகவும் தெரிவித்தனர். இதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த இரண்டு ஆண்டுகளாக  மாவட்ட
நிர்வாகம், நகராட்சி நிர்வாகம்,மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியோருக்கு மனுக்கள் அளித்தும்  நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் வியாழக்கிழமை குப்பைகளை கொட்ட வந்த தனியாருக்குச் ச சொந்தமான லாரியை அப்பகுதியைச் சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர்  லாரியை சிறைபிடித்தனர். லாரியின் ஓட்டுநர் அங்கிருந்து சென்றுவிட்டதால் வெகு நேரமாக காத்திருந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு  கோரிக்கை விடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT