முகப்பு
நாமக்கல்

விபத்தில்லா தீபாவளி: தீயணைப்புத் துறை விழிப்புணர்வு

நாமக்கல் தீயணைப்புத் துறை சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விபத்து இல்லாமல் பட்டாசு வெடிப்பது

Updated On : 5 நவம்பர் 2018, 8:53 am IST
பகிர்:

நாமக்கல் தீயணைப்புத் துறை சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விபத்து இல்லாமல் பட்டாசு வெடிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை
நடைபெற்றது. 
இந்த நிகழ்ச்சிக்கு தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலர் அழகரசன் தலைமை வகித்து விழிப்புணர்வுப் பிரசாரத்தைத் துவக்கி வைத்தார்.  நிலைய அலுவலர் பொன்னுசாமி உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் குழுவாகச் சென்று நகர்ப் பகுதி முழுவதும் விழிப்புணர்வுத் துண்டறிக்கைகளை வழங்கினர். 
மேலும்,  மின் கம்பங்களின் அருகில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.  வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கக் கூடாது.  பட்டாசு கொளுத்தும்போது ஒரு வாளியில் தண்ணீர் வைத்து கொள்ள வேண்டும் என சிறுவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments