நாமக்கல்

மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்:  500 பேர் பங்கேற்பு

DIN

நாமக்கல்லில் நடைபெற்ற மாதாந்திர விளையாட்டுப் போட்டிகளில் 500 மாணவ,  மாணவிகள் பங்கேற்றனர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட  அளவிலான விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன. விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் சி.த.பெரியகருப்பன் துவக்கிவைத்தார். 
இதில் தடகள விளையாட்டுப் போட்டிகளில் 100, 800 மீட்டர் ஓட்டம்,  நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல்,  குண்டெறிதல்,  ஈட்டி எறிதல் மற்றும் தட்டெறிதல் போட்டிகள் நடைபெற்றன.  நீச்சல் போட்டியில் 50, 100, 200 மற்றும் 400 மீட்டர் ப்ரி ஸ்டைல் போட்டிகளும்,  50 மீட்டர் பேக் ஸ்டோக்,  50 மீட்டர் பிரஸ்ட் ஸ்டோக்,  50 மீட்டர் பட்டர்பிளை ஸ்டோக் மற்றம் 200 மீட்டர் தனித் திறன் போட்டிகளும் நடைபெற்றன. மேலும், கபாடி மற்றும் கால்பந்துப் போட்டிகளும் நடைபெற்றன. போட்டிகளில் முதல் 2 இடங்களைப் பிடித்தவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.  இதில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 500 மாணவ,  மாணவிகள் கலந்துகொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

SCROLL FOR NEXT