முகப்பு
நாமக்கல்

குமாரபாளையத்தில் குதிரை வண்டி ரேக்ளா பந்தயம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குமாரபாளையத்தில் குதிரை வண்டி ரேக்ளா எல்லை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 8 அக்டோபர் 2018, 9:17 am IST
பகிர்:

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குமாரபாளையத்தில் குதிரை வண்டி ரேக்ளா எல்லை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குமாரபாளையம் - பவானி குதிரை வண்டி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில், ஐந்தாவது ஆண்டாக நடைபெற்ற இப் போட்டிகளுக்கு நகரக் கூட்டுறவு வங்கித் தலைவர் ஏ.கே. நாகராஜன் தலைமை வகித்தார். சங்கத் தலைவர் எம். வெங்கிடு வரவேற்றார்.
திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளர் எம். சண்முகம் போட்டிகளைத் தொடக்கி வைத்தார். தமிழகம் முழுவதுமிருந்து  70-க்கும் மேற்பட்ட குதிரைகள் இப் போட்டிகளில் பங்கேற்றன. 
புதிய குதிரை, 43 அங்குல உயர குதிரை, 45 அங்குல உயர குதிரை மற்றும் பெரிய குதிரை என நான்கு பிரிவுகளாக இப்போட்டிகள் நடத்தப்பட்டன. குமாரபாளையம் - எடப்பாடி சாலையில் காவேரி நகர் முதல் 7 கி.மீ. தொலைவுக்கு நடத்தப்பட்ட இப்போட்டிகளை சாலையின் இருபுறங்களிலும் ஏராளானோர் பார்த்து ரசித்தனர். இதில், முதல் மூன்றிடங்களைப்  பிடித்த குதிரைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.