நாமக்கல்

பேட்டை புதுமாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா

DIN

பரமத்தி வேலூர் பேட்டை புதுமாரியம்மன் கோயிலில் 44ஆம் ஆண்டு நவராத்திரி விழா கடந்த 10ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.  இதில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் தினந்தோறும் தரிசனம் செய்து விருகின்றனர்.
பேட்டை புதுமாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த வருடமும் 44 ஆம் ஆண்டு நவராத்திரி விழா கடந்த 10 ஆம் தேதி தொடங்கியது.  விழாவை முன்னிட்டு கோயில் பிரகாரத்தில் பல்வேறு வகையான கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு, புதுமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும்,சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. 
தொடர்ந்து வரும் 19 ஆம் தேதி வரை நவராத்திரி விழா நடைபெறுகிறது.  18 ஆம் தேதி இரவு ஊஞ்சல் உற்சவமும், 19 ஆம் தேதி மாலை 5 மணிக்கு சுவாமி பேட்டை புதுமாரியம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு பரமத்தி வேலூர் முக்கிய வீதிகள் வழியாக சென்று பேட்டையில் உள்ள பகவதியம்மன் கோயில் முன்பு அம்பு சேர்வை நடைபெறுகிறது.  விழா ஏற்பாடுகளை பேட்டை புதுமாரியம்மன் கோயில் நவராத்திரி விழாக் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT