தமிழ் மொழியில் மருத்துவ கல்வி அளிக்க கோரிக்கை
உலகத் தாய் மொழி தினத்தையொட்டி, தமிழ் மொழியில் மருத்துவக் கல்வியைக் கொண்டு வரவேண்டும் என பாவேந்தர் இலக்கியப் பேரவை வலியுறுத்தியுள்ளது.
உலகத் தாய் மொழி தினத்தையொட்டி, தமிழ் மொழியில் மருத்துவக் கல்வியைக் கொண்டு வரவேண்டும் என பாவேந்தர் இலக்கியப் பேரவை வலியுறுத்தியுள்ளது.
நாமக்கல்லில் பாவேந்தர் இலக்கியப் பேரவை கூட்டம், அதன் நிறுவனர் ப.சுப்பண்ணன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மருத கோபாலன், வளையப்பட்டி சுப்பிரமணியம், புலவர் அ.தங்கவேலு, ஆசிரியர் வீ.பொன்னுசாமி, வழக்குரைஞர் பெரியசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். கூட்டத்தில், உலகத் தாய்மொழி தினத்தையொட்டி, தமிழகத்தில் மருத்துவக் கல்வி உள்ளிட்ட அனைத்து உயர்கல்விகளையும் தாய்மொழியில் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.