நாமக்கல்

தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

DIN

பரமத்தி வேலூர் காவல் துறை சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பரமத்திவேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் உட்கோட்டம் சார்பில், பரமத்தி வேலூரில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை பரமத்தி வேலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் பழனிசாமி தொடக்கி வைத்தார். விழிப்புணர்வு ஊர்வலம் பரமத்தி வேலூர் சிவா திரையரங்கு நான்கு சாலையில் தொடங்கி,  பொத்தனூர் நான்கு சாலை, கடைவீதி, அண்ணா சாலை, பள்ளிச்சாலை வழியாகச் சென்று கந்தசாமி கண்டர் மேல்நிலைப் பள்ளி  அருகில் நிறைவு பெற்றது.  ஊர்வலத்தில் தலைக்கவசம் அணிவதன் அவசியம்  குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு காவல் துணைக் கண்காணிப்பாளர் பழனிசாமி மரக்கன்றுகளை வழங்கி பாராட்டி, மரங்கள் வளர்ப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.  
முன்னதாக சட்டத்தையும், நீதிமன்ற உத்தரவினையும் மதித்து நடப்போம் என்றும், இரு சக்கர வாகனத்தை ஓட்டும் போது கட்டாயம் தலைக்கவசம் அணிந்து ஓட்டுவோம் எனவும் காவல்துறை சார்பில் வலியுறுத்துவோம் என போலீஸார் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
ஊர்வலத்தில், பரமத்தி வேலூர் காவல் ஆய்வாளர் மனோகரன், போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் ஜெய்சங்கர், பரமத்தி காவல் ஆய்வாளர் செந்தில்குமார், பரமத்தி வேலூர் துணைக் கண்காணிப்பாளர் உட்கோட்டத்துக்கு உள்பட்ட பரமத்தி வேலூர், பரமத்தி, ஜேடர்பாளையம், நல்லூர் மற்றும் வேலாகவுண்டம்பட்டியைச் சேர்ந்த காவல்துறையினர் கலந்து
கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தினத்தையொட்டி சாலை விழிப்புணா்வு ஊா்வலம்

அதியமான் கோட்டையில் தேய்பிறை அஷ்டமி பெருவிழா

குருப் பெயா்ச்சி: கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

‘நான் முதல்வன்’ திட்டத்தில் மாநில அளவில் நாமக்கல் முதலிடம்: ஆட்சியா் பாராட்டு

பொத்தனூா் மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT