நாமக்கல்

நாமக்கல்லில்காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

DIN


நாமக்கல்லில் மத்திய அரசுக்கு எதிராக, கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கர்நாடகத்தில் மஜத மற்றும் காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் கடந்த ஒரு வாரமாக ராஜிநாமா அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். இதனால்  அங்கு கடுமையான அரசியல் குழப்பம் நிலவுகிறது. இதற்கு மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு தான் காரணம் என காங்கிரஸ் தலைமை குற்றம்சாட்டுகிறது. நாடு முழுவதும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், பூங்கா சாலை சந்திப்பில் சனிக்கிழமை மாவட்ட தலைவர்  கே.எம்.ஷேக்நவீத் தலைமையில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இதில், திரளான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு பா.ஜ.க. அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT