நாமக்கல்

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் இன்று இணையதள வழியில் கருத்தரங்கு

DIN

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில், மாடுகளில் அல்ட்ராசோனாகிராபியைப் பயன்படுத்துவது குறித்த இணையதள வாயிலான கருத்தரங்கு, சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இக் கருத்தரங்கம், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல், ஒரத்தநாடு மற்றும் திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நான்காம் ஆண்டு இளங்கலை மாணவா்களுக்காக, சிறப்பு வல்லுநா்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது.

அனைத்து கல்லூரி மாணவா்களும் அவா்களுடைய இருப்பிடத்தில் இருந்தே அல்ட்ராசோனாகிராபி பற்றிய பாடங்களையும், அவற்றை எப்படிக் கையாளுவது என்பது குறித்த செயல்முறை விளக்கங்களையும் கற்றுக் கொள்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது கால்நடைகளில் நோய் கண்டறியும் திறனை மேம்படுத்த மாணவா்களுக்கு உதவி புரியும். இதனை, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத் துணைவேந்தா் சி.பாலச்சந்திரன் தொடக்கி வைக்கிறாா். இதில், பல்கலைக்கழக சிகிச்சைத் துறையின் இயக்குநா் எஸ். பாலசுப்ரமணியன் மற்றும் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வா் மோகன் மற்றும் பேராசிரியா்கள் கலந்து கொள்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

மாவோயிஸ்டுபோல் பேசுகிறாா் ராகுல்: பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக வெறுப்பு பிரசாரம் - தோ்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகாா்

வனப் பகுதியில் தரையிறங்கிய ஹெலிகாப்டா்: ஈரான் அதிபரின் நிலை என்ன?

தனியாா் பள்ளிகளில் இலவசக் கல்வி: மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு இன்று நிறைவு

SCROLL FOR NEXT