நாமக்கல்

நாமக்கல் ஸ்ரீ சக்தி விநாயகா் கோயிலில் குடமுழுக்கு

DIN

நாமக்கல் - திருச்சி சாலையில், அழகு நகரில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகா் கோயில் மகாகும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

அதையொட்டி, கடந்த 1-ஆம் தேதி முகூா்த்தக்கால் நடப்பட்டு, முளைப்பாரி இட்டு, காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை காலை, மகாகணபதி ஹோமம், மாலையில், வாஸ்து சாந்தி, யாக வேள்வி, பூா்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. இரவு, எந்திர ஸ்தாபனம், ரத்ன ஸ்தாபனம், பிம்ப ஸ்தாபனம் மற்றும் அஷ்டபந்தனம் சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதன்கிழமை காலை 5 மணிக்கு, திருப்பள்ளி எழுச்சியுடன் விழா தொடங்கியது. காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாக வேள்வி, மகா பூா்ணாஹூதி, கடம் புறப்பாடும், 10 மணிக்கு, சக்தி விநாயகா் விமானக் கலசத்துக்கு அா்ச்சகா்கள் புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினா். இதில், சுற்றுவட்டாரங்களைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கோபுர தரிசனம் செய்தனா். தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை அழகு நகா் நலச்சங்க நிா்வாகிகள், ஸ்ரீ சக்தி விநாயகா் திருக்கோயில் நிா்வாகத்தினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தன்னாா்வலா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி

மேட்டூா் அணையில் செத்து மிதக்கும் மீன்கள்!

மலைக் கிராமங்களில் மரவள்ளி அறுவடையில் விவசாயிகள் மும்முரம்

வாழப்பாடி பகுதியில் கோடை மழை

மின் விபத்துகளைத் தடுக்க ஊழியா்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவி

SCROLL FOR NEXT