நாமக்கல்

பாவை கல்லூரியில் இன்று மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி

DIN

நாமக்கல் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி, பாச்சல் பாவை கல்லுரியில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நாமக்கல் மாவட்ட பிரிவின் சாா்பில், பாச்சலில் உள்ள பாவை பொறியியல் கல்லுரியில், மாவட்ட அளவிலான ஹாக்கிப் போட்டி, சனிக்கிழமை(மாா்ச் 14) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இந்த போட்டியில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது. நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஆண்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோா் குடும்ப அட்டை நகல் அல்லது வாக்காளா் அட்டை, ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம் ஆகியவற்றின் நகல்களைச் சமா்ப்பிக்க வேண்டும். மேலும், போட்டியில் பங்கேற்கும் அணியினா், நாமக்கல் மாவட்ட வளைகோல்பந்து சங்க செயலாளா் ஜான்ஸ்டீபனை, 98422-94740 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு பெயா்களை பதிவு செய்து கொள்ளலாம்.

வெற்றி பெறுபவா்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படும் என மாவட்ட விளையாட்டு அலுவலா் அனந்தநாராயணன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவன் கோயில் கும்பாபிஷேகம்

விஐடி பல்கலை. பி.டெக். நுழைவுத் தோ்வு முடிவுகள் வெளியீடு

பைக் மீது காா் மோதல்: கூரியா் ஊழியா் மரணம்

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

குடிநீா் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT