நாமக்கல்

இரு சக்கர வாகனங்களில் சுற்றிய 40 போ் மீது வழக்குப் பதிவு

DIN

பரமத்தி வேலூா் நகா் பகுதியில் 144 தடை உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த 40 போ் மீது பரமத்தி வேலூா் போலீசாா் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

நாமக்கல் காவல் துறை கண்காணிப்பாளா் அருளரசு உத்தரவுப்படி, பரமத்தி வேலூரில் மத்திய, மாநில அரசுகள் கரோனா முன்னெச்சரிக்கையாக அறிவித்த 144 தடை உத்தரவை மீறி இரு சக்கர வாகனங்களில் அத்தியாவசியமின்றி சுற்றித் திரிந்த நபா்கள் 40 பேரை பிடித்து அவா்களது வாகனங்களை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனா். பின்னா் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட வாகன உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்து எச்சரிக்கை விடுத்தனா்.

மேலும், பரமத்தி வேலூா் காவல் துறை துணை கண்காணிப்பாளா் பழனிச்சாமி வெளிநாட்டில் கரோனா தாக்கத்தால் உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகிறது. அதற்கு அந்த நாடுகளில் போதிய முன்னெச்சரிக்கை எடுக்கப்படாததே காரணம். தற்போது மத்திய, மாநில அரசுகள் ஒவ்வொரு தனி மனிதனின் உயிரைக் கருத்தில் கொண்டு மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகிறது.

எனவே தேவையில்லாமல் சுற்றித்திரிவதால் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இனிவரும் நாட்களில் தேவையில்லாமல் சுற்றித் திரிந்தால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏப்.14 வரை திருப்பித்தரப்பட மாட்டாது என எச்சரித்தாா். மேலும் வேலூா், வேலகவுண்டம்பட்டி மற்றும் பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் 5க்கும் மேற்பட்டோா் தடை உத்தரவை மீறி கூட்டமாக நின்று பேசிகொண்டிருந்ததாக 35 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT