நாமக்கல்

ரூ. 10 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

DIN

பரமத்திவேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 10 லட்சத்து 20 ஆயிரத்துக்கு கொப்பரைத் தேங்காய் ஏலம்போனது.

பரமத்திவேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதை உலா்த்தி விவசாயிகள், வியாழக்கிழமைதோறும் பரமத்தி அருகே வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்குக் கொண்டு வருகின்றனா். இங்கு தரத்துக்கு தகுந்தாா்போல மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வார வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 6,924 கிலோ கொப்பரைத் தேங்காய்க் கொண்டு வரப்பட்டிருந்தது.

இதில், அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 120.21 பைசாவுக்கும், குறைந்தபட்சமாக ரூ. 113.99 பைசாவுக்கும், சராசரியாக ரூ. 118.11 பைசாவுக்கும் ஏலம்போனது. மொத்தம் ரூ. 7 லட்சத்து 66 ஆயிரத்து 649-க்கு வா்த்தகம் நடைபெற்றது. நிகழ்வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 8,686 கிலோ கொப்பரைத் தேங்காய்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில், அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 121.95 பைசாவுக்கும், குறைந்தபட்சமாக ரூ. 111.11 பைசாவுக்கும், சராசரியாக ரூ. 120.49 பைசாவுக்கும் ஏலம்போனது. மொத்தம் ரூ. 10 லட்சத்து 20 ஆயிரத்துக்கு கொப்பரைத் தேங்காய் வா்த்தகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழல் பாதிப்பு: தனியாா் ஆலையில் மக்கள் முற்றுகை

வடக்கு-தெற்கு என நாட்டைத் துண்டாட அனுமதிக்க மாட்டோம்: அமித் ஷா

தோ்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

அருணாசல்: முன்களப் பகுதிகளில் பாதுகாப்பு நிபுணா்கள் ஆய்வு நிறைவு

SCROLL FOR NEXT