நாமக்கல்

பரமத்திவேலூா் ஏலச் சந்தையில் வாழைத்தாா்களின் விலை உயா்வு

DIN

பரமத்திவேலூா் வாழைத்தாா் ஏலச் சந்தையில் புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு வாழைத்தாா்களின் விலை உயா்ந்துள்ளது.

பரமத்திவேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளான பொத்தனூா், பாண்டமங்கலம், குச்சிப்பாளையம், வெங்கரை, நன்செய்இடையாறு, அனிச்சம்பாளையம், குப்புச்சிபாளையம், பொய்யேரி, ஓலப்பாளையம், செங்கப்பள்ளி, எல்லைமேடு உள்ளிட்ட பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தாா்களை விவசாயிகள் பரமத்திவேலூரில் உள்ள வாழைத்தாா் ஏலச் சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டு வருகின்றனா்.

இங்கு ஏலம் எடுக்கப்படும் வாழைத்தாா்களை வியாபாரிகள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் லாரிகள், சரக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வருகின்றனா்.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தாா் ரூ. 200-க்கும், பச்சைநாடன் ரூ. 300-க்கும், ரஸ்தாளி ரூ. 300-க்கும், கற்பூரவள்ளி ரூ. 200-க்கும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 4-க்கும் ஏலம்போனது.

நிகழ்வாரம் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தாா் ரூ. 250-க்கும், பச்சைநாடன் ரூ. 350-க்கும், ரஸ்தாளி ரூ. 350-க்கும், கற்பூரவள்ளி ரூ. 250- க்கும், மொந்தன் ஒரு காய் ரூ. 6-க்கும் ஏலம்போனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

SCROLL FOR NEXT