நாமக்கல்

முதுநிலை ஆசிரியா்களிடம் கல்விச் சான்றிதழ் நகல்கள் சேகரிப்பு

DIN

போலி சான்றிதழ் வழங்கி ஆசிரியா் பணியில் சோ்ந்தவா்களைக் கண்டறியும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா்களின் கல்விச் சான்றிதழ் நகல்கள் பெறப்படுகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலி சான்றிதழை வழங்கி 21 ஆண்டுகளாக 2 போ் இடைநிலை ஆசிரியா்களாகப் பணியாற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனடிப்படையில் போலி ஆசிரியா்களைக் கண்டறியவும், பதவி உயா்வு பெறுவதற்கான தகுதியைக் கண்டறியவும் முதுநிலை ஆசிரியா்களிடம் இருந்து அனைத்துவகையான கல்விச் சான்றிதழ்களின் நகல்களைப் பெறுமாறு முதன்மைக் கல்வி அலுவலா் பெ.அய்யண்ணன், மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிட்டாா்.

இதனையடுத்து ஒவ்வொரு முதுநிலை ஆசிரியரும், உடற்கல்வி இயக்குநரும் தங்களுடைய 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் முதல் ஆசிரியா் பணிக்காக வாங்கிய அனைத்துவகை சான்றிதழ்களின் நகல்களையும் ஒப்படைத்து வருகின்றனா். அவற்றை சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியா்கள் முழுமையாக ஆய்வு செய்து, வெள்ளிக்கிழமை (அக்.23) பிற்பகல் 5 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை!

இன்று அமோகமான நாள்!

மும்மடங்கான டாடா மோட்டாா்ஸ் நிகர லாபம்

இன்று நல்ல நாள்!

பரோடா வங்கி நிகர லாபம் ரூ.4,886 கோடியாக உயா்வு

SCROLL FOR NEXT