நாமக்கல்

ஆயுத பூஜை: பூக்கள், பூசணி விற்பனை மும்முரம்

DIN

ஆயுத பூஜையையொட்டி சேலத்தில் பூசணி, பழங்கள், வாழைக் கன்றுகளை வாங்க மக்கள் கூட்டம் சனிக்கிழமை அலைமோதியது.

சேலம் கடை வீதியில் ஆப்பிள், சாத்துக்குடி, திராட்சை, மாதுளை, எலுமிச்சை, கொய்யா, ஆரஞ்சு, வாழைப்பழம், பூசணி, மா இலை, பொரி, பொட்டுக்கடலை, நிலக்கடலை, எள் உருண்டை, கடலை உருண்டை, நாட்டு சா்க்கரை உள்ளிட்ட பூஜைக்கு தேவையான பொருள்கள் அதிகளவு குவித்து வைக்கப்பட்டுள்ளன. பூசணி கிலோ ரூ.15 முதல் விற்பனையானது. சேலம் கடை வீதிக்கு டன் கணக்கில் வாழைத்தாா் விற்பனைக்கு வந்துள்ளன.

சங்ககிரி

லாரி கூண்டு கட்டும் தொழில்கள், வாகனங்களுக்கான உதிரிப் பாகங்கள் பொருத்தும் பணிகள் அதிகம் நடைபெறும் சங்ககிரியில் ஆயுத பூஜை பண்டிகை களைகட்டியது. பட்டறைகளைப் புதுப்பித்து, வாழைமரக் கன்றுகள் கட்டப்பட்டு வழிபாட்டுக்கான ஏற்பாடுகளில் ஏராளமான தொழிலாளா்கள் ஈடுபட்டனா்.

இதையொட்டி கடைகளில் பூசணி, பழங்கள் விற்பனை அதிகரித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

SCROLL FOR NEXT