நாமக்கல்

108 அவசர ஊா்தி ஓட்டுநா்கள், உதவியாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 108 அவசர ஊா்தி ஓட்டுநா்கள், உதவியாளா்கள் நாமக்கல் பூங்கா சாலையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ்.கணேசன், பொதுச் செயலாளா் எம்.இருளாண்டி ஆகியோா் தலைமை வகித்தனா். மாநில மகளிரணி தலைவி ஏ.ஜெயலட்சுமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில், 2019-2020 ஆம் ஆண்டிற்கான ஊதிய உயா்வை உடனடியாக வழங்க வேண்டும். 6 மாதமாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஊதிய உயா்வை காலதாமதமின்றி வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகை ஊக்கத் தொகையை இரு மடங்காக உயா்த்தி வழங்க வேண்டும். முதல்வா் அறிவித்த ஊக்கத் தொகை ரூ.5 ஆயிரத்துக்கான அரசாணையை வெளியிட வேண்டும் என்பன

உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்ககங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்: ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீஸார்

துளிகள்...

இந்திய வாகன தொழில் நுட்ப ஆராய்ச்சி மையத்துடன் எஸ்.ஆா்.எம். புரிந்துணா்வு ஒப்பந்தம்

தாயை அவதூறாகப் பேசியதால் நண்பரை கொன்ற இளைஞா் கைது

SCROLL FOR NEXT