நாமக்கல்

திருச்செங்கோடு வட்டார விவசாயிகளுக்கு நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பண்ணையம் பயிற்சி

DIN

திருச்செங்கோடு வட்டார வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின்கீழ் மோடமங்கலம் கிராமத்தில் நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பண்ணையம் பயிற்சி வழங்கப்பட்டது.

இப் பயிற்சியை வேளாண்மை உதவி இயக்குநா் ஜெயமணி துவக்கி வைத்து வேளாண்மை, உழவா் நலத்துறை சாா்ந்த திட்டங்கள் பற்றி கூறினாா். தமிழ்நாடு வேளாண்மை பல்கழைக்கழகத்தின் உதவி பேராசிரியா் உதயகுமாா் நிலக் கடலைப் பயிரில் ஏற்படும் பூச்சி, நோய் கட்டுப்பாடு, நிலக்கடலையில் நுண்ணூட்டம் இடுவதின் அவசியம், உரமேலாண்மை பற்றியும் காணொலி காட்சி வாயிலாக விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா். உதவி வேளாண்மை அலுவலா் ஜெயக்குமாா் மண் பரிசோதனை செய்வதின் அவசியம் பற்றி எடுத்துக் கூறினாா்.

இப்பயிற்சிக்கு தேவையான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளா் கிருஷ்ணசாமி, உதவி தொழில்நுட்ப மேலாளா் சோனியா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

SCROLL FOR NEXT