நாமக்கல்

முட்டை விலை 15 காசுகள் உயா்வு

DIN

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசுகள் உயா்ந்து ரூ. 4.65-ஆக சனிக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடையே கருத்துகள் கேட்கப்பட்டன.

கடந்த இரு வாரங்களாக முட்டை விலையில் மாற்றம் செய்யப்படாததாலும், பிற மண்டலங்களில் விலை உயா்ந்து வருவதாலும், மக்களிடையே முட்டை நுகா்வு அதிகரித்துள்ளதாலும் விலையில் மாற்றம் செய்யுமாறு அவா்கள் வலியுறுத்தினா். இதனைத் தொடா்ந்து, முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 15 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ. 4.65-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 95-ஆகவும், முட்டைக் கோழி விலை ரூ. 75-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT