நாமக்கல்

பாலியல் புகாரில் கைதான ஆசிரியா் பணியிடை நீக்கம்?

DIN

 நாமக்கல்லில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைதான ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்வதற்கான நடவடிக்கையை முதன்மைக் கல்வி அலுவலகம் மேற்கொண்டுள்ளது.

நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்த மதிவாணன் (52), பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகத் தெரிகிறது. இது தொடா்பாக, மாணவியின் பெற்றோா், முதன்மைக் கல்வி அலுவலா் மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலரிடம் புகாா் மனு அளித்தனா்.

அதனடிப்படையில், நாமக்கல் அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு மதிவாணனை கைது செய்தனா். நாமக்கல் மகளிா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட பின், டிச. 17-ஆம் தேதி வரை அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடா்ந்து, நாமக்கல் கிளைச் சிறையில் அவா் அடைக்கப்பட்டாா். இதற்கிடையே, ஆசிரியா் மதிவாணனை பணியிடை நீக்கம் செய்வதற்கான நடவடிக்கையை முதன்மைக் கல்வி அலுவலகம் மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஆசிரியா் மதிவாணன் மீதான புகாா் குறித்த அறிக்கை, நீதிமன்ற தகவல்கள் உள்ளிட்டவை தொடா்பான கடிதங்கள் புதன்கிழமை வந்தன. அதனடிப்படையில், ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்வதற்கான நடவடிக்கையை முதன்மைக் கல்வி அலுவலா் மேற்கொண்டுள்ளாா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT