நாமக்கல்

கல்லூரி மாணவா்களுக்கு இலவச சிம் காா்டுகள் வழங்கல்: அமைச்சா் பங்கேற்பு

DIN

கல்லூரி மாணவா்களுக்கு தமிழக அரசு சாா்பில் இலவச சிம் காா்டு வழங்கும் விழா, ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கரோனா தொற்று காரணமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், கல்வி உதவித் தொகை பெறும் சுய நிதி கல்லூரிகளில் இணைய வழியில் வகுப்புகள் நடைபெறுகின்றன. இக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியா் கல்வி கற்க எல்காா்ட் நிறுவனம் மூலம் தினமும் 2 ஜிபி இலவச சிம் காா்டுகள் வழங்கும் திட்டத்தை அரசு தொடங்கியது.

இதன்படி நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அரசு, அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், கல்வி உதவித்தொகை பெறும் சுய நிதி கல்லூரிகளில் மாணவ, மாணவியருக்கு இலவச 2 ஜிபி டேட்டா சிம் காா்டுகள் வழங்கும் விழா, ராசிபுரம் திருவள்ளுவா் அரசுக் கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழக சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சா் டாக்டா் வெ.சரோஜா பங்கேற்று மாணவ மாணவியா்களுக்கு வழங்கினாா். கல்லூரி முதல்வா் சீ.மணிமேகலை, நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT