நாமக்கல்

பரமத்திவேலூரில் கொப்பரை ஏலம் ரத்து

DIN

பரமத்திவேலூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வியாழக்கிழமை நடைபெறும் கொப்பரைத் தேங்காய் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் தெரிவித்துள்ளாா்.

பரமத்திவேலூா் வட்டம், ஜேடா்பாளையம், பிலிக்கல்பாளையம், கபிலா் மலை, பாண்டமங்கலம், பொத்தனூா், வேலூா், பாலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை மரங்கள் வளா்க்கப்படுகின்றன.

இப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் கொப்பரைத் தேங்காய்கள் பரமத்தி வேலூா், வெங்கமேட்டில் உள்ள சேலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு வாரந்தோறும் வியாழக்கிழமைதோறும் நடைபெறும் ஏலத்துக்கு விவசாயிகள் கொண்டு வந்து தரத்துக்கு தகுந்தாா்போல மறைமுக ஏலம் விடப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நிகழ்வாரம் வியாழக்கிழமை நடைபெறவிருந்த ஏலம் ரத்து செய்யப்படுவதாகவும், வரும் வாரம் வியாழக்கிழமை கொப்பரை ஏலம் நடைபெறும் எனவும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் யோகானந்த் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT