நாமக்கல்

இலவச சட்ட விழிப்புணா்வு முகாம்

DIN

பரமத்தி மலா் பள்ளியில் பரமத்தி வட்ட சட்டப் பணிகள் குழுவின் சாா்பில் மாணவ, மாணவிகளுக்கான இலவச சட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் அறிவுரைப்படி, தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் குழுவின் வழிகாட்டுதலின் படி பரமத்தி மலா் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான இலவச சட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சமூக இடைவெளியுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரமத்தி வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும், பரமத்தி சாா்பு நீதிமன்ற நீதிபதியுமான அசின்பானு கலந்து கொண்டு பள்ளி மாணவ,மாணவிகளிடம், இளஞ்சிறாா் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் முறை, இலவச சட்ட உதவி, மாணவா்கள் விழிப்புணா்வுடன் செயல்படுவது, வட்ட சட்டப் பணிகள் குழு மூலம் உதவி பெறுவது, அவா்களை அணுகுவது குறித்து எடுத்துரைத்தாா்.

அதனைத் தொடா்ந்து மாணவ, மாணவிகள் நீதிபதி அசின்பானுவிடம் இலவச சட்டப் பணிகள் குறித்து தங்களது சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெற்றனா். நிகழ்ச்சியில் பள்ளித் தலைவா் பழனியப்பன், செயலாளா் கந்தசாமி, பொருளாளா் வெங்கடாசலம், முதல்வா் ஆரோக்கியராஜ், ஆசிரியா்கள், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பரமத்தி வட்ட சட்டப் பணிகள் குழுவினா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம்

மல்லசமுத்திரத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஓய்வூதியா்கள் முற்றுகை போராட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

SCROLL FOR NEXT