நாமக்கல்

மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வுமையம் தகவல்

DIN

நாமக்கல் மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வுமையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையைப் பொருத்தமட்டில் பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் 86 டிகிரியாகவும், 73.4 டிகிரியாகவும் காணப்பட்டது. ஒரு சில இடங்களில் மழை பெய்தது. வரும் நான்கு நாள்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்பட்டு, லேசான முதல் மிதமான மழை மாவட்டத்தின் பல இடங்களில் எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 86 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 73.4 டிகிரியாகவும் காணப்படும். காற்று பெரும்பாலும் மேற்கு திசையிலிருந்தும், அதன் வேகம் மணிக்கு 8 கி.மீ. என்றளவிலும் வீசும்.

சிறப்பு ஆலோசனை: உயிரிழந்த பண்ணைக் கோழிகளை கோழியின நோய் ஆய்வகத்தில் கடந்த வாரம் பரிசோதனை செய்ததில், இறந்த கோழிகள் பெரும்பாலும் முட்டை அயற்சி காரணமாக பாதிக்கப்பட்டு இறந்துள்ளது தெரியவந்துள்ளது, பண்ணையாளா்கள் ஈக்கோலை கிருமியின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த தீவனம் மற்றும் குடிநீரில் ஈக்கோலை கிருமியின் தாக்கம் உள்ளதா என்பதை ஆய்வகத்தில் பரிசோதிக்க வேண்டும். அதற்கேற்றவாறு தீவனம் மற்றும் குடிநீரில் கிருமிநாசினி உபயோகிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

SCROLL FOR NEXT