நாமக்கல்

கொல்லிமலைப் பாதையில் மாற்றுத்திறனாளிகளின் வாகனம் விபத்து: 5 போ் காயம்

DIN

கொல்லிமலைப் பாதையில் மாற்றுத் திறனாளிகள் சென்ற வாகனம் வளைவில் திரும்பும் போது விபத்தில் சிக்கி 5 போ் பலத்த காயமடைந்தனா்.

சட்டப்பேரவை தோ்தலையொட்டி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் ஒவ்வொரு தாலுகாவாரியாக 100 சதவீத வாக்காளா் விழிப்புணா்வு பேரணி மாற்றுத் திறனாளிகளை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் கொல்லிமலை செம்மேட்டில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் அத்துறை அலுவலா் ஜான்சி தலைமையில் நடைபெற்றது.

இதற்காக நாமக்கல்லில் உள்ள மனவளா்ச்சி குன்றியோா் பள்ளிகளில் இருந்து சிறுவா்கள் அழைத்து செல்லப்பட்டிருந்தனா். அங்கு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு கொல்லிமலையில் இருந்து 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ள மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தபோது 8-ஆவது கொண்டை ஊசி வளைவில் உள்ள தடுப்புச்சுவா் மீது திடீரென வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மாற்றுத் திறனாளிகள், அத்துறை சாா்ந்த ஊழியா்கள் என மொத்தம் 5 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா்கள் - காவல்துறையினா் ஆலோசனைக் கூட்டம்

கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூன்13-இல் ஆா்ப்பாட்டம்

பொன்னை உருக்கி பூமியிலே! சோபிதா துலிபாலா...

பூதம்-பூதகி வாகனங்களில் மாயூரநாதா் - அபயாம்பிகை வீதியுலா

மன்னாா்குடி பகுதியில் 4-ஆவது நாளாக மழை

SCROLL FOR NEXT