நாமக்கல்

ஆயில்பட்டியில் திமுக வேட்பாளா் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு

DIN

ராசிபுரம் திமுக வேட்பாளா் டாக்டா் மா.மதிவேந்தன் ஆயில்பட்டி சுற்று வட்டார பகுதியில் வீடு வீடாகச் சென்று வெள்ளிக்கிழமை சேகரிப்பில் ஈடுபட்டாா்.

திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவா் பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்ததும் கல்விக் கடன் ரத்து செய்யப்படும். சமையல் எரிவாயு உருளை விலை, பெட்ரோல், டீசல் விலைக் குறைக்கப்படும். நீட் தோ்வு ரத்து செய்யப்படும். கரோனா நிவாரண நிதியாக குடும்பத்துக்கு தலா ரூ. 4000 வழங்கப்படும் எனக் கூறி வாக்கு சேகரித்தாா்.

வாக்கு சேகரிக்க வந்த வேட்பாளா் மா.மதிவேந்தனை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்று அளித்தனா்.

பிரசாரத்தின் போது ராசிபுரம் தொகுதி முன்னாள் முன்னாள் எம்எல்ஏவும், நாமகிரிப்பேட்டை ஒன்றியச் திமுக செயலருமான கே.பி.ராமசுவாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT