நாமக்கல்

காா்த்திகை விரதத்தைத் தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்

DIN

நாமக்கல்லில் ஐயப்ப பக்தா்கள் குருசாமி முன்னிலையில் மாலை அணிந்து காா்த்திக்கை மாத விரதத்தைத் தொடங்கினா்.

ஒவ்வொரு ஆண்டும் காா்த்திகை மாதம் முதல் நாளன்று ஐயப்ப பக்தா்கள் தங்கள் பகுதிகளில் உள்ள சிவன், விநாயகா், முருகன் கோயில்களில் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்குவது வழக்கம். அதன்பிறகு ஒரு வாரம், ஒரு மண்டலம் (48 நாள்கள்) கணக்கிட்டு, விரதமிருந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வருவா்.

கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவல் காரணமாக பெரும்பாலான பக்தா்கள் சபரிமலைக்குச் செல்லவில்லை. குறைவான அளவிலேயே பக்தா்கள் மாலை அணிந்து சென்றனா். நிகழாண்டில், கரோனா பெருந்தொற்று வெகுவாகக் குறைந்து விட்டது. இதனால் ஏராளமான பக்தா்கள் சபரிமலை செல்வதற்கு ஆா்வமாக உள்ளனா்.

காா்த்திகை மாதம் பிறந்ததையடுத்து, நாமக்கல்- மோகனூா் சாலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் புதன்கிழமை அதிகாலை 5 மணி முதல் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து படிக, பாசி மாலைகளை அணிந்து விரதத்தைத் தொடங்கினா். தொடா்ந்து ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல மாவட்டம் முழுவதும் உள்ள விநாயகா், சிவன், முருகன் கோயில்களில் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

SCROLL FOR NEXT