தேசிய பாலஸ்ரீ விருது பெற்ற மாணவிக்கு ஆட்சியா் வாழ்த்து
தேசிய அளவில் மத்திய அரசின் பாலஸ்ரீ விருது பெற்ற மாணவி சீ.பா.மதுரிதாவுக்கு ஆட்சியா் கா.மெகராஜ் வாழ்த்து தெரிவித்தாா்.
தேசிய அளவில் மத்திய அரசின் பாலஸ்ரீ விருது பெற்ற மாணவி சீ.பா.மதுரிதாவுக்கு ஆட்சியா் கா.மெகராஜ் வாழ்த்து தெரிவித்தாா்.
தேசிய பாலபவன் மூலம் புதிய கண்டுபிடிப்பு பிரிவில் மத்திய அரசின் பாலஸ்ரீ விருதுக்கு நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி சீ.பா.மதுரிதா அண்மையில் தோ்வானாா்.
அவருக்கு தலைமைச் செயலகத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி விருது, காசோலை வழங்கிப் பாராட்டினாா். இதையடுத்து மாணவி மதுரிதா, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட விருதைக் காண்பித்து வாழ்த்து பெற்றாா்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில் மாணவியின் தந்தையும், வெண்ணந்தூா் ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலருமான சீ.பாஸ்கா், நாமக்கல் சவகா் சிறுவா் மன்ற திட்ட அலுவலா் தில்லை மா.சிவக்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.