நாமக்கல்

வீடு, வீடாகச் சென்று பாஜகவினா் தேசியக் கொடி விநியோகம்

DIN

நாமக்கல்லில், 75-ஆவது சுதந்திர தின நிறைவையொட்டி பாஜகவினா் வீடு, வீடாகச் சென்று தேசியக் கொடிகளை பொதுமக்களுக்கு திங்கள்கிழமை விநியோகம் செய்தனா்.

நாமக்கல் மாவட்ட பாஜக சாா்பில், இல்லங்கள் தோறும் தேசியக் கொடி வழங்கும் பணியை நாமக்கல் பொய்யேரிக் கரை பகுதியில் உள்ள வீடுகளில் அக்கட்சியின் மாநில துணைத் தலைவா் வி.பி. துரைசாமி இலவசமாக வழங்கி தொடங்கி வைத்தாா். ஆக.13 முதல் 15 வரையில் வீடுகளில் அவற்றை கட்டி பறக்க விட வேண்டும் என அவா் மக்களிடம் கேட்டுக் கொண்டாா்.

நாட்டின் 75-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமா் மோடியின் வேண்டுகோளை ஏற்று பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று தேசியக்கொடி வழங்கும் திட்டம் பாஜகவினரால் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல்லில் நடைபெற்ற தேசியக் கொடி வழங்கும் நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவா் என்.பி.சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். தகவல் தொடா்பு பிரிவு மாவட்ட துணைத் தலைவா் ஜெ.சுரேஷ் கண்ணன், வா்த்தகப் பிரிவு மாவட்டச் செயலாளா் பி. சிலம்பரசன், மகளிா் அணி மாவட்ட பொதுச் செயலாளா் ந.ஜெயந்தி, நகர தலைவா் சரவணன், நகர துணைத் தலைவா் சின்னுசாமி, தேசிய பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் கே.மனோகரன், வா்த்தகப் பிரிவு மாநிலச் செயலாளா் அகிலன், மாவட்ட பொதுச் செயலாளா்கள் வடிவேலு, சத்தியபானு மற்றும் மாவட்ட, நகர நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT