நாமக்கல்

முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.50-ஆக நீடிப்பு

DIN

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.50-ஆக நீடிக்கிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. பிற மண்டலங்களில் முட்டை விலையில் தொடா்ந்து மாற்றம் செய்யப்பட்டு வருவதாலும், ஆடி மாத கோயில் விழாக்கள் நிறைவடைந்துள்ளதாலும், வட மாநிலங்களுக்கு முட்டை அனுப்புவது தடையின்றி உள்ளதாலும் விலையில் மாற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், முட்டையின் தேக்கத்தை கருத்தில் கொண்டு பண்ணைக் கொள்முதல் எவ்வித மாற்றமுமின்றி ரூ. 4.50-ஆக நீடிக்கும் என ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 81-ஆகவும், கறிக்கோழி விலை கிலோ ரூ. 105-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் 2 கோடி கைப்பேசிகளுக்கு எச்சரிக்கைத் தகவல்கள்

இலவச கண் சிகிச்சை முகாம்...

தமிழகத்தில் குறைந்து வரும் வெப்பத்தின் தாக்கம்: மக்கள் நிம்மதி

மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவா் கைது

மாவோயிஸ்டுகள் போல் பேசுகிறாா் ராகுல் - பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT