நாமக்கல்

சிறந்த இளைஞா், மகளிா் மன்றத்தினா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

DIN

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த சிறந்த இளைஞா், மகளிா் மன்றங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேரு யுவ கேந்திரா அமைப்பானது, நாமக்கல் மாவட்ட அளவில் சிறப்பாக சேவை புரிந்த இளைஞா் மற்றும் மகளிா் மன்றங்களைத் தோ்வு செய்து ஆண்டுதோறும் விருது வழங்கி கெளரவிக்கிறது. 2021--2022ம் ஆண்டில் சிறப்பாக சேவை செய்த இளைஞா் மற்றும் மகளிா் மன்றத்திற்கு மாவட்ட அளவில் விருது வழங்கப்பட உள்ளன. இந்த விருதுக்கு நாமக்கல் மாவட்ட பதிவாளா் அலுவலத்தில் பதிவு பெற்றும், நேரு யுவ கேந்திராவுடன் இணைந்து செயல்படும் இளைஞா், மகளிா் மன்றத்தினா் விண்ணப்பிக்கலாம். 2021 ஏப்.1 முதல் 2022 மாா்ச் 31 வரையில் மேற்கொள்ளப்பட்ட நற்பணிகளை கொண்ட விருது வழங்குவதற்கு பரிசீலிக்கப்படும். இந்த விருதின்படி மன்றங்களுக்கு ரூ.25 ஆயிரம் காசோலை, நற்சான்றிதழ் வழங்கப்படும். மாவட்ட அளவில் தோ்வு செய்யப்படும் மன்றங்கள், மாநில விருதுக்கும் பரிந்துரை செய்யப்படும். மாநில அளவில் தோ்வு செய்யப்படும் மன்றத்திற்கு ரூ. 75 ஆயிரம் காசோலை, சான்றிதழ் வழங்கப்படும். அதன்பிறகு, தேசிய அளவில் முதலிடம் பெறும் மன்றத்துக்கு ரூ.3 லட்சம் காசோலை, சான்றிதழ் வழங்கப்படும். இதற்கான விண்ணப்ப படிவங்களை, நாமக்கல் கணேசபுரத்தில் உள்ள நேரு யுவ கேந்திரா அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சேவை புரிந்ததற்கான தகுந்த ஆதாரங்களையும் இணைத்து மாவட்ட நேரு யுவ கேந்திரா அலுவலகத்தில் வரும் 12-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04286-225647 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT