நாமக்கல்

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை சரிவு

DIN

பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் பூக்கள் விலை சரிவடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

பரமத்தி வேலூா் மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிா் செய்யப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள், பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைகளுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனா்.

வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனா். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி ரூ. 3000, சம்பங்கி கிலோ ரூ.150, அரளி கிலோ ரூ. 300, ரோஜா கிலோ ரூ.150, முல்லைப் பூ ரூ. 1800, செவ்வந்தி ரூ. 100, கனகாம்பரம் ரூ. 1,000, காக்கட்டான் ரூ. 1200- க்கும் ஏலம் போயின.

இந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ. 2,000, சம்பங்கி கிலோ ரூ. 120, அரளி கிலோ ரூ. 250, ரோஜா கிலோ ரூ. 200, முல்லை கிலோ ரூ. 1600, செவ்வந்தி ரூ. 120- க்கும், கனகாம்பரம் ரூ. 1200, காக்கட்டான் ரூ. 800-க்கும் ஏலம் போயின. பூக்களின் வரத்து குறைந்த நிலையில் பூக்களின் விலைச் சரிவடைந்துள்ளதாகவும், சுப முகூா்த்தங்கள் அதிக அளவில் இல்லாததால் பூக்களின் விலைச் சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT