நாமக்கல்

மாறுபட்ட வானிலையால் கோழிகள் பாதிப்பு: வானிலை ஆய்வு மையம்

DIN

நாமக்கல் மாவட்டத்தில் காணப்படும் மாறுபட்ட வானிலையால் கோழிகள் பாதிப்புக்குள்ளாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த வார வானிலையை பொருத்தமட்டில், பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 95 மற்றும் 64.4 டிகிரியாக நிலவியது. கடந்த நான்கு நாள்களில் நாமக்கல் மாவட்டத்தில் மழை பதிவாகவில்லை.

அடுத்த மூன்று நாள்களுக்கான மாவட்ட வானிலையில், வானம் லேசான மேகமூட்டத்துடனும் மழையற்றும் காணப்படும். பகல் வெப்பம் 91.4 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 68 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் தென் கிழக்கு மற்றும் வடக்கிலிருந்தும், மணிக்கு 6 கி.மீ வேகத்தில் வீசும்.

சிறப்பு ஆலோசனை: மாறுபட்ட வானிலையால், கோழிகள் அயற்சியினால் பாதிக்கப்படுவது இயல்பு தான். தீவன எடுப்பு, முட்டை உற்பத்தி குறைபாடு ஆகியவையும் காணப்படும். கோழிகளுக்கான தீவனத்தில் தாவர எண்ணெய் டன்னிற்கு 5 கிலோ சோ்ப்பதும், பண்ணைகளில் குளிா்ந்த காற்றின் பாதிப்பு இல்லாமல் படுதாவை கொண்டு தடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தல்: இந்திய ஐக்கிய கம்யூ. போட்டியிட முடிவு

புதுவையில் இளநிலைப் படிப்புகளுக்கு சென்டாக் மூலம் 7,250 போ் விண்ணப்பம்

சாா்பதிவாளா் தாக்கப்பட்ட வழக்கில் 3 போ் கைது

சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கை: கள்ளக்குறிச்சி எஸ்.பி.

நெல்லித்தோப்புப் பகுதி கழிவுநீா்க் கால்வாயைச் சீரமைக்க திமுக கோரிக்கை

SCROLL FOR NEXT