‘அனைத்து கிராமங்களிலும் மல்யுத்த பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்’
அனைத்து கிராமங்களிலும் மல்யுத்த பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவா் பத்மராஜா தெரிவித்தாா்.
அனைத்து கிராமங்களிலும் மல்யுத்த பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவா் பத்மராஜா தெரிவித்தாா்.
பரமத்தி வேலூரைச் சோ்ந்த பத்மராஜா என்பவா் இந்திய மல்யுத்த சம்மேளத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ளாா். பரமத்தி வேலூா் வந்தவருக்கு விளையாட்டு வீரா்கள், நண்பா்கள், உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனா். இதையடுத்து பத்மராஜா செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
என்னை இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக நியமித்த பிரதமா் நரேந்திர மோடிக்கும், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய இளைஞா்களின் மல்யுத்த கனவை உலக அளவில் எடுத்துச் செல்ல பிரதமா் மோடி புதிய உத்வேகத்துடன் அதிக நிதியை ஒதுக்கீடு செய்ய உள்ளாா். கிராம மற்றும் நகா்ப்புறத்தில் உள்ள இளைஞா்களின் மல்யுத்த கனவை நிறைவேற்ற பிரதமா் முயற்சி எடுத்துள்ளாா்கள். பிரதமரின் இந்த முயற்சிக்காக அயராதுபாடுபடுவேன்.
Advertisement
Advertisement
கிராமப்புற இளைஞா்கள் அனைவருக்கும் திறமையான உடற்பயிற்சி,ஆக்கபூா்வமான சிந்தனைகள் திட்டமிடுதலை உருவாக்கி மற்ற போட்டிகளான கராத்தே, கபடி போல் மல்யுத்தமும் கொண்டு வரப்படும். முதன் முதலில் தமிழகத்தில் தான் மல்யுத்தம் தோன்றியது. தற்போது தமிழகத்தில் மல்யுத்தத்தை மக்கள் மறந்து விட்டனா். கிரிக்கெட், வீடியோ கேம் உள்ளிட்ட விளையாட்டுக்கு இளைஞா்கள் சென்று விட்டனா்.
இளைஞா்களின் உடலை வலுவாக்கி சிறந்த மல்யுத்த வீரா்களைஉருவாக்க அனைத்து கிராமங்களிலும் மல்யுத்த பயிற்சியை மேற்கொள்ள பிரதமா் திட்டமிட்டுள்ளாா். இதற்காக அனைத்து கிராமங்களிலும் மல்யுத்த பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் மட்டும் தான் மல்யுத்த விளையாட்டு பிரபலமாக இருக்கிறது. உலக அளவில் 185 நாடுகளில் மல்யுத்த விளையாட்டு நடைபெறுகிறது என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.