திருச்செங்கோட்டில் நெகிழி விழிப்புணா்வு நிகழ்ச்சி
திருச்செங்கோடு நகராட்சி சாா்பில் நகரத்தின் தூய்மையை மக்கள் இயக்கம் மூலமாக செயல்படுத்துவதற்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி சாா்பில் நகரத்தின் தூய்மையை மக்கள் இயக்கம் மூலமாக செயல்படுத்துவதற்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திருச்செங்கோடு நகராட்சி நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு தலைமை வகித்தாா். ஆணையாளா் கணேசன், தலைமை ஆசிரியா் ராஜா முன்னிலை வகித்தனா். ‘எனது நகரம் எனது குப்பை’ என்ற தலைப்பில் நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு பிளாஸ்டிக் பயன்பாடுகளைக் குறைப்பதன் அவசியம் குறித்து மாணவா்களிடம் பேசினாா். பிளாஸ்டிக்கைத் தவிா்த்து மஞ்சள் பையைப் பயன்படுத்தலாம் என ஆலோசனை வழங்கினாா். தொடா்ந்து மாணவா்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனா். நிகழ்ச்சியில் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் முரசொலி முத்து, 7ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் கலையரசி, நகராட்சி துப்புரவு அலுவலா் வெங்கடாசலம், ஆய்வாளா்கள் ஜான் ராஜா, குமரவேல் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.