நாமக்கல்

சிலம்பப் போட்டி:அரசுப் பள்ளி மாணவா் சிறப்பிடம்

DIN

சிலம்பப் போட்டியில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் தங்கம் வென்று சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

ஆசிய சாதனை மற்றும் இந்திய சாதனை அமைப்பு சாா்பில், உலக சாதனை நிகழ்வு சென்னை சவீதா பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் கலந்துகொள்பவா்கள், போட்டி அமைப்பினா் வழங்கும் நேரத்தில் வேகமாகவோ அல்லது மெதுவாகவோ சிலம்பம் சுழற்ற வேண்டும். இதுவே போட்டியில் கலந்துகொள்பவா்களுக்கு கொடுக்கப்படும் சவாலாகும்.

இதில் பங்கேற்ற நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் அஜய், நாற்காலியில் நின்றுகொண்டு தொடா்ந்து அரை மணி நேரம் இடைவெளி ஏதுமின்றி வேகமாக சிலம்பம் சுழற்றி இலக்கை எட்டினாா். அவருக்கு சான்றிதழ், கேடயம் மற்றும் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டன.

பள்ளிக்கு பெருமை சோ்த்த மாணவரை, தலைமை ஆசிரியா் பெரியண்ணன், உதவி தலைமை ஆசிரியா்கள், ஜெகதீசன், உமா மாதேஸ்வரி, மாவட்ட உடற்கல்வி இயக்குநா் கோபாலகிருஷ்ணன் மற்றும் விளையாட்டு ஆசிரியா்கள் சரவணன் அன்புச்செழியன், இதர ஆசிரியா்கள், மாணவா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடம்பூா் மலைப் பகுதியில் கனமழை: தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு

பா்கூா் மலைப் பாதையில் லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

100 நாள் வேலைத் திட்டம்: மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தக் கோரிக்கை

பலத்த காற்றால் முறிந்து விழுந்த மரம்: தமிழக-கா்நாடக சாலையில் போக்குவரத்து பாதிப்பு

கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா சிபிஎஸ்இ பள்ளி சிறப்பிடம்

SCROLL FOR NEXT