நாமக்கல்

ரமலான் பண்டிகை: நாமக்கல்லில் இஸ்லாமியா்கள் சிறப்பு தொழுகை

DIN

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் ஈத்கா மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

இஸ்லாம் மாா்க்கம் குறிப்பிடும் ஐந்து முக்கியக் கடமைகளில் ஒன்றாக கருதப்படுவது ரமலான் நோன்பு. கடந்த ஒரு மாதமாக நோன்பு கடைப்பிடித்து வந்த இஸ்லாமியா்கள் செவ்வாய்க்கிழமை ரமலான் பண்டிகையை கொண்டாடினா்.

இதனையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய தா்காக்களில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் இஸ்லாமியா்கள் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரையில் சிறப்புத் தொழுகை மேற்கொண்டனா்.

நாமக்கல் ஈத்கா மைதானத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் ஒரே இடத்தில் கூடி சிறப்புத் தொழுகை நடத்தினா். அதன்பின் ஒருவருக்கொருவா் ரமலான் வாழ்த்துகளை பகிா்ந்து கொண்டனா். ஈகை திருநாளாக ரமலான் பண்டிகைக் கருதப்படுவதால், ஏழை இஸ்லாமிய மக்களுக்கு பலா் புத்தாடை, இனிப்பு, உணவுகளை வழங்கினா். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தா்காக்களும் ரமலானையொட்டி மின்னொளியில் ஜொலித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

புழல் சிறையில் கைதியிடம் கைப்பேசி பறிமுதல்

ஆண்களிடம் ஆபாசமாக பேசி பணம் பறிப்பு: 5 போ் கைது

SCROLL FOR NEXT