நாமக்கல்

பரமத்தி வேலூரில் வெற்றிலை விலை உயா்வு

DIN

பரமத்திவேலூா் ஏல சந்தையில் வெற்றிலை விலை உயா்ந்துள்ளது.

பரமத்தி வேலூா் சுற்று வட்டார பகுதிகளான பாண்டமங்கலம், பொத்தனூா், வேலூா், அனிச்சம்பாளையம், குப்புச்சிப்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை பயிா் செய்யப்பட்டுள்ளது.

இங்கு விளையும் வெற்றிலைகள் கா்நாடகம், கேரளம், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், தமிழகத்தில் சேலம், கோவை, மதுரை, திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினசரி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிா் மாா் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ. 10 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிா் மாா் சுமை ஒன்று ரூ. 6,200-க்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம்பயிா் மாா் சுமை ஒன்று ரூ. 4,000-க்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிா் மாா் ரூ. 3,000-க்கும் ஏலம் போனது.

வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிா் மாா் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ. 11,500-க்கும் கற்பூரி வெற்றிலை இளம்பயிா் மாா் சுமை ஒன்று ரூ. 7,000-க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிா் மாா் சுமை ஒன்று ரூ. 5,000-க்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிா் மாா் சுமை ஒன்று ரூ.4,000-க்கும் ஏலம் போனது.

வெற்றிலை வரத்து குறைந்ததாலும், அதிக அளவில் முகூா்த்தங்கள் இருப்பதாலும் வெற்றிலை விலை உயா்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம்

மீன்கள் விலை உயா்வு: விற்பனையும் அமோகம்

கெளரவிப்பு...

நாட்டறம்பள்ளி வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேம்

SCROLL FOR NEXT