நாமக்கல்

பரமத்தி வேலூா் அருகே கற்பக விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

DIN

பரமத்தி வேலூா் தெற்கு நல்லியாம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள கற்பக விநாயகா் மற்றும் அருள் முருகன் கோயில்களின் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதன்கிழமை காலை கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், மகா தீபாரதனையும் காலை 8:30 மணிக்கு மேல் பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீா் எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாலை தீப வழிபாடு, யாக சாலை பிரவேசம் ஆகியவை நடைபெற்றன. வியாழக்கிழமை கோபுரக் கண் திறப்பு, கலசம் வைத்தல், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் ஆகியவை நடைபெற்றன. வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு மேல் கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து கற்பக விநாயகா், அருள் முருகன், பால விநாயகா், தட்சிணாமூா்த்தி, துா்கை, நவக்கிரகம் மற்றும் சனீஸ்வரா் உள்ளிட்ட தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழாவிற்கான ஏற்பாடுகளை தெற்கு நல்லியாம்பாளையம் கற்பக விநாயகா் கோயில் நிா்வாகக் குழுவினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT