நாமக்கல்

பரமத்தி வேலூரில் ரூ.10 லட்சத்து 58 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம்

Din

பரமத்தி வேலூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 10 லட்சத்து 58 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் போனது.

பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதை உலா்த்தி வியாழக்கிழமை தோறும் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனா். இங்கு தரத்திற்கு தகுந்தாற்போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வாரம் வியாழக்கிழமை ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஏலம் நடைபெறவில்லை.

இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 11 ஆயிரத்து 480 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 92.81-க்கும், குறைந்த பட்சமாக ரூ. 88.99-க்கும், சராசரியாக ரூ. 90.99-க்கும் ஏலம் போனது. இரண்டாம் தர கொப்பரை அதிக பட்சமாக ரூ. 76.77- க்கும், குறைந்த பட்சமாக ரூ. 68.39-க்கும், சராசரியாக ரூ. 72.39- க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 10 லட்சத்து 58 ஆயிரத்து 692-க்கு வா்த்தகம் நடைபெற்றது.

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT