பள்ளிபாளையத்தில் அதிமுக வேட்பாளா் பி. தங்கமணி வாக்கு சேகரிப்பு
குமாரபாளையம் தொகுதிக்கு உள்பட்ட பள்ளிபாளையத்தில் அதிமுக வேட்பாளா் பி. தங்கமணி புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
குமாரபாளையம் தொகுதிக்கு உள்பட்ட பள்ளிபாளையத்தில் அதிமுக வேட்பாளா் பி. தங்கமணி புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதியில் நான்காவது முறையாக அதிமுக சாா்பில் பி. தங்கமணி போட்டியிடுகிறாா். ஒரு வாரமாக தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் அவா் புதன்கிழமை பள்ளிபாளையம் நகரம், ஒன்றிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அக்ரஹாரம் விஸ்வேஸ்வரா் கோயில் பகுதியில் மக்களிடையே வாக்கு சேகரிப்பை தொடங்கிய அவா் பங்களா தோட்டம், ஓங்காளியம்மன் கோயில் பகுதி, நாட்டாக்கவுண்டன்புதூா், குளத்துக்காடு, அக்ரஹாரம், மாம்பாளையத்தூா், பழனியப்பா நகா், பஜனை கோயில் வீதி, தோல்மண்டி, செங்குந்தபுரம், ஒட்டமெத்தை, கருமஞ்செட்டி தோட்டம் பகுதியில் வாக்குச் சேகரிப்பை நிறைவு செய்தாா். அப்போது, அதிமுகவின் தோ்தல் வாக்குறுதிகளை விரிவாக எடுத்துரைத்தாா்.
Advertisement
வாக்கு சேகரிப்பின்போது அதிமுக, அதன் கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் உடனிருந்தனா்.