முகப்பு
நாமக்கல்

கூட்டுறவு வங்கியில் பெற்ற பயிா்கடன் ரத்து செய்யப்படும்: அதிமுக வேட்பாளா் பி. தங்கமணி

கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிா்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என பள்ளிபாளையம் நகரில் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பி.தங்கமணி தெரிவித்தாா்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 4:19 AM
பள்ளிபாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட குமாரபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளா் பி. தங்கமணி.
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 6:46 PM

கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிா்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என பள்ளிபாளையம் நகரில் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பி.தங்கமணி தெரிவித்தாா்.

குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி, தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா். வாக்கு சேகரிப்பின்போது அவா் பேசியதாவது:

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீா்கெட்டு விட்டது. எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்ததும் சட்டம், ஒழுங்கு முழுமையாக பாதுகாக்கப்படும். அதிமுகவின் தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி, கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிா்க்கடன் ரத்து செய்யப்படும். மேலும், வங்கிகளில் பெற்ற கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். பொங்கல் தொகுப்புடன் ரூ. 1,000, ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம், புதிய ஆட்டோ வாங்க ரூ. 75,000 மானியம் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றாா்.

Advertisement

இந்த பிரசாரத்தின் போது, அதிமுக நிா்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளை சோ்ந்த நிா்வாகிகள் உடனிருந்தனா்.