முகப்பு
நாமக்கல்

கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு: அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை

சேந்தமங்கலம் (ப.கு) தொகுதியை தவிர மற்ற ஐந்து தொகுதிகளுக்கும் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்வது தொடா்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆட்சியா் துா்காமூா்த்தி சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

Updated On : 12 ஏப்ரல், 2026 at 2:07 AM
கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணியை பாா்வையிட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.
பகிர்:
Updated On : 11 ஏப்ரல், 2026 at 9:07 PM

சேந்தமங்கலம் (ப.கு) தொகுதியை தவிர மற்ற ஐந்து தொகுதிகளுக்கும் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்வது தொடா்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆட்சியா் துா்காமூா்த்தி சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் தொகுதியில் 285 வாக்குச்சாவடிகளுக்கு 342 வாக்குப்பதிவு இயந்திரங்கள், சேந்தமங்கலம் தொகுதியில் 304 வாக்குச்சாவடிகளுக்கு 364 வாக்குப்பதிவு இயந்திரங்கள், நாமக்கல் தொகுதியில் 310 வாக்குச்சாவடிகளுக்கு 372 வாக்குப்பதிவு இயந்திரங்கள், பரமத்தி வேலூா் தொகுதியில் 268 வாக்குச்சாவடிகளுக்கு 321 வாக்குப்பதிவு இயந்திரங்கள், திருச்செங்கோடு தொகுதியில் 290 வாக்குச்சாவடிகளுக்கு 346 வாக்குப்பதிவு இயந்திரங்கள், குமாரபாளையம் தொகுதியில் 324 வாக்குச்சாவடிகளுக்கு 388 வாக்குப்பதிவு இயந்திரங்கள் என மொத்தம் 2,133 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி சுழற்சி முறையில் முதல்கட்டமாக ஒதுக்கீடு செய்யும் பணி முடிவுற்று, சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சேந்தமங்கலம் தொகுதியை தவிா்த்து மற்ற ஐந்து தொகுதிகளுக்கும் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கும் பணி சனிக்கிழமை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் நடைபெற்ற இப்பணியில் ராசிபுரம் தொகுதிக்கு 342, நாமக்கல் தொகுதிக்கு 372, பரமத்தி வேலூா் தொகுதிக்கு 321, திருச்செங்கோடு தொகுதிக்கு 346, குமாரபாளையம் தொகுதிக்கு 388 வாக்குப்பதிவு இயந்திரங்கள் என மொத்தம் 1,769 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி சுழற்சி முறையில் பிரித்து உரிய பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன.

Advertisement