முகப்பு
நாமக்கல்

பள்ளிபாளையத்தில் அதிமுக வேட்பாளா் பி.தங்கமணி வாக்கு சேகரிப்பு

Updated On : 21 ஏப்ரல் 2026, 12:42 am IST
பள்ளிபாளையம் நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட குமாரபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.தங்கமணி.
பகிர்:

குமாரபாளையம் தொகுதிக்கு உள்பட்ட பள்ளிபாளையம் நகரப் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் பி.தங்கமணி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதியில் நான்காவது முறையாக அதிமுக சாா்பில் பி.தங்கமணி போட்டியிடுகிறாா். மூன்று வாரமாக தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளிலும் அவா் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா்.

அந்தவகையில், பள்ளிபாளையம் நகரம், ஒன்றியப் பகுதிகளில் அவா் திங்கள்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி, திருச்செங்கோடு பிரசாரத்தின்போது அளித்த தோ்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி அவா் மக்களிடையே வாக்கு சேகரித்தாா். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலா்களை தூவியும் வரவேற்பு அளித்தனா்.

Advertisement

Advertisement

அதிமுக ஆட்சி அமைந்ததும் சிறப்பு நிதியாக ரூ. 10 ஆயிரம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். மகளிா் உதவித்தொகை ரூ. 2 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும். பயிா்க்கடன் தள்ளுபடி, நெசவாளா்களுக்கு இலவச மின்சாரம், மாணவா்களுக்கான கல்விக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட தோ்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள 297 வாக்குறுதிகளை அவா் விரிவாக எடுத்துரைத்தாா். இந்த வாக்கு சேகரிப்பின்போது அதிமுக, கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் உடனிருந்தனா்.