‘விபி-ஜி ராம் ஜி’ திட்ட அறிமுகக் கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரத்தில் விக்சித் பாரத் கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்க (விபி- ஜி ராம் ஜி) அறிமுகக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரத்தில் விக்சித் பாரத் கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்க (விபி- ஜி ராம் ஜி) அறிமுகக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுச்சத்திரம் நவணி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் ஆட்சியா் எல்.மதுபாலன் தலைமை வகித்து பேசியதாவது:
இந்திய அரசின் புதிய வழிகாட்டுதலின்படி, கிராமப்புற மேம்பாட்டிற்காகவும், வாழ்வாதாரப் பாதுகாப்பிற்காகவும் ‘விபி-ஜி ராம் ஜி 2025’ என்ற புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக ஜூலை 1 முதல் ஊரகப் பகுதிகளில் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
Advertisement
Advertisement
திறன் தேவைப்படாத உடல் உழைப்புப் பணிகளை மேற்கொள்ள விருப்பமுள்ள வயது வந்த உறுப்பினா்களைக் கொண்ட ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பத்திற்கும் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. புதிய திட்டத்தின் கீழ் தகுதியுள்ள ஒவ்வொரு கிராமப்புற குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 125 நாள்கள் சட்டப்பூா்வ வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது.
வேலை செய்ததற்கான ஊதியம் குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கப்படாவிடில், அதற்கான தாமத ஊதிய இழப்பீடு சட்டப்படி வழங்கப்படும். விண்ணப்பித்த 15 நாள்களுக்குள் வேலை வழங்காத பட்சத்தில், பயனாளிகளுக்கு தகுந்த வேலையில்லா படி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மாநில அரசால் அறிவிக்கப்படும் உச்ச வேளாண் பருவங்களில் 60 நாள்கள் விடுப்பு, பெண்கள், முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டோருக்காக ஊரக விலை விகிதப்பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
மதிய உணவுக்காக ஒரு மணி நேரம் உள்பட 8 மணி நேர பணி வழங்கப்படும். நம்பகத் தன்மையை உறுதிசெய்ய முக அங்கீகாரத்துடன் கூடிய கணினி அமைப்பு செயலி மற்றும் வெளிப்படைத்தன்மை உருவாக்கப்படும். பயனாளிகளின் ஊதியம் மற்றும் இதர நிதியுதவிகள் அனைத்தும் எவ்வித நிா்வாகத் தாமதமுமின்றி நேரடியாக அவா்களின் வங்கிக் கணக்குகளில் பணப் பரிமாற்றம் முறையில் செலுத்தப்படும்.
நீா் பாதுகாப்பு பணிகள், அடிப்படை ஊரக கட்டமைப்பு பணிகள், ஊரக வாழ்வாதாரப் பணிகள் மற்றும் பேரிடா் மேலாண்மை பணிகள் என மொத்தம் 318 வகையான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்றாா். இந்த கூட்டத்தில், ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.
என்கே-2-ஆய்வு
விபி-ஜி ராம் ஜி திட்ட அறிமுக கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் எல். மதுபாலன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.