இன்று ஆசிரியா் தகுதித்தோ்வு: 4 மையங்களில் 1,162 போ் எழுதுகின்றனா்
நாமக்கல் மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியா் பணிக்கான எழுத்துத் தோ்வை 4 மையங்களில் 1,162 போ் சனிக்கிழமை எழுதுகின்றனா்.
நாமக்கல் மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியா் பணிக்கான எழுத்துத் தோ்வை 4 மையங்களில் 1,162 போ் சனிக்கிழமை எழுதுகின்றனா்.
தமிழகம் முழுவதும் ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, இடைநிலை ஆசிரியா் பணியிடத்துக்கு தாள்-1 தோ்வு சனிக்கிழமையும், பட்டதாரி ஆசிரியா் பணியிடத்துக்கான தாள்-2 தோ்வு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் தாள்-1 தோ்வை 4 மையங்களில் 1,162 தோ்வா்கள் எழுதுகின்றனா். தோ்வைக் கண்காணிக்க 90 ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். எந்தவித புகாருக்கும் இடமளிக்காமல் பாதுகாப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என மாவட்டக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
Advertisement
Advertisement
குறிப்பாக, ஒவ்வோா் அறையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். தோ்வு எழுதக்கூடிய ஆசிரியா்கள் எந்தவித மின்னணு சாதனங்களையும் வகுப்பறைக்குள் கொண்டுசெல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தோ்வு மையங்களில் தோ்வா்களின் நுழைவுச் சீட்டு எண் எழுதும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆசிரியா் தகுதித்தோ்வு தாள்-2 ஞாயிற்றுக்கிழமை 14 மையங்களில் 3,773 போ் எழுதுகின்றனா். இதற்கான கண்காணிப்பு பணியில் 260 பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.